கம்பராமாயணம் 9514 · யுத்த 30.163
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தினகரனை அணவு கொடிகள் - கதிரவனையே தீண்டுகின்ற கொடிகள்; திசை அடைவ - திக்குகளின் எல்லையை அடைந்தனவாக; சினவு, பொரு பரிகள் - சினம் கொண்டனவும் போர் செய்கின்றனவுமாகிய குதிரைகள்; அணுக செறிவ - எதிராளிகளை நெருங்கிச் செறிந்தனவாக; கதிர்கொள் மணி இரதம் - ஒளி கொண்ட மணிகள் பதிக்கப்பட்ட தேர்கள்; உயர் அனகனொடும் - உயர்ந்தவனும் குற்றமற்றவனுமாகிய இராமபிரானோடு; அமரின் முடுகி எதிர - போரில் விரைந்து எதிர்ப்பதற்கு; எழு - எழுகின்ற; கனக வரை பொருவ - பொன் மலையாகிய மேருவைப் போல் அமைந்தன.
சினவு, பரி, பொரு பரி எனக் கூட்டிப் பொருள் கொள்ளப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their banners, which touched the sun, reached the edges of the directions;
- their angry, fighting horses pressed close; to close with the lofty
- faultless one and rush against him in battle, rising up,
- the chariots, set with shining gems, were like the golden mountain.
What the poem says
The demon chariots now advance on Irāmaṉ, the faultless one. Their banners are so tall they brush the sun and spread to the ends of the sky, and their horses are fierce and eager for battle.
Studded with glittering gems and rising up to charge, the chariots look like Mēru, the golden mountain at the centre of the world.