கம்பராமாயணம் 9519 · யுத்த 30.168

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எய்யும் ஒரு பகழி ஏழு கடலும் இடு
வெய்ய களிறு பரி ஆளொடு இரதம் விழ
ஒய்யென் ஒருகதியின் ஓட உணர் அமரர்
கைகள் என அவுணர் கால்கள் கதி குலைவ.

பொருள் · Meaning in Tamil

எய்யும் ஒரு பகழி - இராமபிரான் எய்யும் ஓர் அம்பானது; ஏழு கடலும் இடு - ஏழு கடல்களிலும் சேரும்படி குறி வைக்கப்பட்ட; வெய்ய களிறு பரி ஆளொடு இரதம் விழ - கொடிய யானைகள், குதிரைகள், காலாட்களோடு தேர்களும் விழும்படி; ஒய்ய ஒரு கதியின் ஓட - வேகம் கொண்ட போக்கிலே ஓட; உணர் அமரர் - அதனை உணர்ந்த தேவர்களின்; கைகள் என - கைகளைப் போல; அவுணர் கால்கள் கதி குலைவ - அரக்கர்களின் கால்கள் நிலையில் திரிந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A single arrow that he shot, aimed to reach all seven seas,
  2. made cruel elephants, horses and chariots with their foot soldiers fall,
  3. and it sped on its swift course; and like the hands of the gods who saw it,
  4. the feet of the demons lost their footing and gave way.

What the poem says

Each arrow Irāmaṉ looses is so powerful that it seems aimed at all seven oceans, bringing down elephants, horses, chariots and foot soldiers together as it flies on.

The gods watching raise their hands in wonder, and the demons' legs buckle and give way. The comparison sets the gods' trembling hands of amazement beside the demons' trembling feet of terror.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eyyum oru pakaḻi ēḻu kaṭalum iṭu
veyya kaḷiṟu pariyāḷoṭu iratam viḻa
oyya oru katiyiṉ ōṭa uṇar amarar
kaikaḷ eṉa avuṇar kālkaḷ kati kulaiva.