கம்பராமாயணம் 9521 · யுத்த 30.170

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'சுருக்கம் உற்றது படை சுருக்கத்தால் இனிக்
கரக்க மற்று ஒரு புறத்து 'என்னும் கண்ணினால்
அரக்கருக்கு அன்று செலவு அரியதாம் வகை
சரக் கொடு நெடு மதில் சமைத்து இட்டான் அரோ.

பொருள் · Meaning in Tamil

சுருக்கம் உற்றது படை - அரக்கரின் படை குறைந்து விட்டது; சுருக்கத்தால் - படையின் அளவு குறைந்து விட்டதால்; இனி ஒரு புறத்து உற்றுக் கரக்கும் - இனி ஒரு புறமாகச் சென்று ஒளிந்து கொள்ளும்; என்னும் கண்ணினால் - என்ற கருத்தினால்; அன்று - அப்போதே; அரக்கருக்குச் செலவு அரிதாம் வகை - அரக்கர்கள் தப்பிப் போக முடியாத வகையாக; சரக் கொடு - அம்புகளைக் கொண்டு; நெடு மதில் சமைத்திட்டான் - பெரிய மதிலை அமைத்துவிட்டான் (இராமன்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thinking, 'The army has dwindled, and because it has dwindled
  2. it will now slip away to one side and hide,'
  3. so that the demons could not escape that day,
  4. he built a long wall made of arrows.

What the poem says

A new movement of the battle begins. Irāmaṉ sees that the demon army has shrunk and guesses that what remains will try to slip away and hide.

To stop any of them escaping, he looses so many arrows that they form a high wall around the field, penning the survivors in.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'curukkam uṟṟatu paṭai curukkattāl iṉik
karakkum uṟṟu oru puṟattu 'eṉṉum kaṇṇiṉāl
arakkarukku aṉṟu celavu ariyatāmvakai
carak koṭu neṭu matil camaittiṭṭāṉ arō.