கம்பராமாயணம் 9523 · யுத்த 30.172

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாண்டவர் மாண்டு அற மற்று உளோர் எலாம்
மீண்டனர் ஒரு திசை ஏழு வேலையும்
மூண்டு உற முருங்கிய ஊழிக் காலத்தில்
தூண்டுறு சுடர் சுட சுருங்கித் தொக்கபோல்.

பொருள் · Meaning in Tamil

மாண்டவர் மாண்டு அற - இறந்தவர்கள் இறந்து ஒழிந்தவராக; மற்றுளோர் எலாம் - அதன்மேலும் உள்ளவர்கள் எல்லாரும்; மூண்டு அற முருக்கிய - பொங்கிப் பெருகி எல்லாவற்றையும் அழிக்கின்ற; ஊழிக் காலத்தில் - உலகங்களின் முடிவுக் காலத்தில்; தூண்டுறு சுடர் சுட - மூண்டு பெருகி வரும் (வடவை முகத் தீ); சுட - சுடுவதால்; ஏழு வேலையும் - ஏழு கடல்களும்; சுருங்கித் தொக்கபோல் - அளவிலே சுருங்கி (ஒரு சிற்றிடத்தில்) கூடியதுபோல; ஒரு திசை மீண்டனர் - ஒரு திசையிலே வந்து சேர்ந்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those who died were wholly dead, and all the rest
  2. drew back into a single quarter, as at the end of an age, when the seven seas
  3. are consumed and destroyed by the surging,
  4. blazing fire, and shrink and gather into one place.

What the poem says

With the dead lying everywhere, the demons still alive crowd together on one side of the field.

The poet compares this to the end of the world, when the submarine fire that burns beneath the ocean flares up and dries the seven seas, which shrink and huddle together in one small space. The shrunken remnant of the vast demon army is like those dwindled oceans.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṇṭavar māṇṭu aṟa maṟṟuḷōr elām
mīṇṭaṉar oru ticai ēḻu vēlaiyum
mūṇṭu aṟa murukkiya ūḻik kālattil
tūṇṭuṟu cuṭar cuṭa curuṅkit tokkapōl.