கம்பராமாயணம் 9524 · யுத்த 30.173
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புரம் சுடு கடவுளும் - முப்புரம் எரித்த சிவனும்; புள்ளின் பாகனும் - (கருடப்) பறவையைச் செலுத்தும் திருமாலும்; அரம் சுடு குலிசவேல் - அரத்தினால் அராவிக் கூர்மைப்படுத்தப் படுகின்ற வச்சிராயுதத்தை ஏந்தியுள்ள; அமரர் வேந்தனும் - தேவர் தலைவனாகிய இந்திரனும்; உரம் சுடுகிற்கிலர் - நம் வலிமையை அழிக்க இயலாதவர்களானார்கள்; ஒருவன் - இப்போது இங்கே உள்ள தனி ஒருவன்; நாம் உடை வரம் சுடும் - தெய்வங்களிடமிருந்து நாம் பெற்ற வரங்களின் வலிமையை அழிக்கிறான்; வாழும் நாள் சுடும் - வாழ்நாளையே அழிக்கிறான்.
வாழும் நாள் சுடும் என்ற தொடரிலுள்ள உம்மையை இடம் மாற்றி வாழ் நாளும் சுடும் எனவும் பொருள் கொள்ளலாம். கருத்து ஒன்றே.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The god who burned the cities, and the rider of the bird,
- and the king of the gods with the thunderbolt-spear honed by the file,
- could not burn away our strength; but one man
- burns our boons, burns our might, burns the days we have to live.'
What the poem says
The trapped demons now speak among themselves in despair. Śiva, who burned the three flying cities, Tirumāl, who rides the eagle Garuḍa, and Indra with his thunderbolt could never destroy their power.
Yet this single man is burning away everything they have: the boons granted them by the gods, their strength and even their lives. The repeated word for burning gives the verse its force.