கம்பராமாயணம் 9527 · யுத்த 30.176

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பண்டு உலகு அளித்தவனோடும் பண் அமை
குண்டையின் பாகனும் பிறரும் கூடினார்
அண்டர்கள் விசும்பின் நின்று ஆர்க்கினார் உழைக்
கண்டிலம்; இவன் நெடு மாயக் கள்வனால்.

பொருள் · Meaning in Tamil

பண்டு உலகு அளித்தவனோடும் - முன்பு உலகங்களைப் படைத்தவனாகிய பிரமனோடும்; பண் அமை குண்டையின் பாகனும் - ஆசனம் அமைந்த இடபத்தைச் செலுத்தும் சிவபிரானும்; பிறரும் கூடினார் - மற்றவர்களும் கூடியிருக்கின்றனர்; விசும்பினின்று - ஆகாயத்திலிருந்து; ஆர்க்கின்றாருழை - ஆரவாரம் செய்கின்ற தேவர்களிடையே; கண்டிலம் - (மும்மூர்த்திகளில் ஒருவனாகிய திருமாலைக்) காணவில்லை; இவன் - இந்த இராமன்; நெடு மாயக்கள்வன் - பெரு மாயைகள் வல்ல (அந்தத்) திருமாலே போலும்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He who long ago gave the world being, and the driver
  2. of the saddled bull, and others too, have gathered;
  3. among the gods who roar from the sky
  4. we do not see one; this man is that great deceiver of wiles.'

What the poem says

Looking up, the demons see the gods gathered in the sky cheering: Brahmā the creator, Śiva who rides the bull, and many others.

One of the great three, however, is missing, and that is Tirumāl. The demons conclude that this man fighting them must be Tirumāl himself, the great master of illusion, come down in human form.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'paṇṭu ulaku aḷittavaṉōṭum paṇ amai
kuṇṭaiyiṉ pākaṉum piṟarum kūṭiṉār
aṇṭarkaḷ vicumpiṉiṉṟu ārkkiṉṟāruḻaik
kaṇṭilam; ivaṉ neṭu māyak kaḷvaṉāl.