கம்பராமாயணம் 9528 · யுத்த 30.177
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இனி - இப்போது; ஒரு கோடி கோடி மேற்று கொன்றனன் - ஒரு கோடி கோடிக்கு மேலான அரக்கரை (இராமன்) கொன்றுவிட்டான்; அன்று எனின் பதுமம் - கோடி கோடி அன்று என்றால் அவனால் கொல்லப்பட்டவரின் எண்ணிக்கை பதுமம் ஆக இருக்கலாம்; அன்று எனின் வெள்ளமா நின்றது - அதுவும் இல்லையென்றால் வெள்ளம் அளவினதாக அமைந்திருக்கலாம். நின்று இனி நினைவது என் பிற - (அத்துணைப் பேரையும் இழந்தபின்) வாளா நிற்பதால் இனிமேல் நினைத்து செய்யக் கூடியது என்ன இருக்கிறது; ஒன்று என நினைக - செய்யத்தக்கது ஒன்றுதான் என நினையுங்கள்; என வன்னி ஓதினான் - என்று வன்னியாகிய அரக்கர் படைத் தலைவன் அரக்கரிடம் பின்வருமாறு கூறினான்.
கோடி - பதுமம் - வெள்ளம் ஒன்றுக்கொன்று ஏற்றம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He has killed by now more than a crore of crores;
- if not, a patumam; if not that, it stands at a vellam;
- what else is there to think of now, standing here?
- Think of it as one thing only', so Vaṉṉi spoke.
What the poem says
Vaṉṉi, a commander of the demon army, steps forward to address the survivors. He reckons that Irāmaṉ has already slain more than a crore of crores of them, or else a patumam, or else a vellam. These are ever larger units used to count vast numbers.
With so many lost, he says, there is no point in standing about deliberating. Only one course remains to them, and he goes on to name it in the next verse.