கம்பராமாயணம் 9530 · யுத்த 30.179

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இடுக்கினில் பெயர்ந்து உறை எண்ணுவேம் எனின்
அடுத்த கூர் வாளியின் அரணம் நீங்கலோம்;
எடுத்து ஒரு முகத்தினால் எய்தி யாம் இனிக்
கொடுத்தும் நம் உயிர் 'என ஒருமை கூறினான்.

பொருள் · Meaning in Tamil

இனி - இதற்குமேல்; இடுக்கு - இந்தச் சங்கடத்திலிருந்து; பெயர்ந்து - நீங்கி; உறை எண்ணுவேம் எனின் - தங்குவதற்குரிய வழிகளை எண்ணிப் பார்த்தோமானால்; அடுத்த - நம்மை (இங்கே இப்போது) அடுத்துள்ளதாகிய; கூர் வாளியின் அரணம் - கூர்மையான அம்பினாலாகிய மதிலுக்கு அப்பால்; நீங்கலோம் - வெளியேற முடியாதவர்களாக இருக்கிறோம்; எடுத்து - ஊக்கம் கொண்டு; ஒரு முகத்தினால் எய்தி - ஒருமுகமாக அடைந்து; யாம் இனிக் கொடுத்தும் நம் உயிர் - இனி நாம் நம் உயிரைக் கொடுப்போமாக; என - என்று; ஒருமை கூறினான் - ஒருதலையாக (உறுதியாக)க் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If we now think of escaping this strait and finding refuge,
  2. we cannot get beyond the rampart of sharp arrows that hems us in;
  3. rising up, coming at him with one face, let us now
  4. give up our lives', so he spoke with a single mind.

What the poem says

Vaṉṉi continues his speech to the trapped demons. There is no hope of slipping out of their predicament, because the wall of sharp arrows Irāmaṉ has built around them cannot be crossed.

The only thing left is to rouse themselves, charge him together as one body and lay down their lives. He says this resolutely, leaving no room for doubt.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṭukku iṉip peyarntu uṟai eṇṇuvēm eṉiṉ
aṭutta kūr vāḷiyiṉ araṇam nīṅkalōm;
eṭuttu oru mukattiṉāl eyti yām iṉik
koṭuttum nam uyir 'eṉa orumai kūṟiṉāṉ.