கம்பராமாயணம் 9533 · யுத்த 30.182
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேந்தருக்கு அரசனும் - (அரக்கர்கள் படைக்கலங்களை வீச) அரசனுக்கு அரசனான இராமனும், காந்தருப்பம் எனும் கடவுள் மாப் படை - காந்தர்ப்பம் என்னும் பெயருடைய தெய்வீகம் பொருந்திய பெருமை மிக்க படைக்கலத்தை; ஊக்கினான் - விரைந்து செலுத்தினான்; நெருப்பு அனைய போர்க் கணை - நெருப்பினைப் போன்ற அந்தப் போர் அம்பு; பாந்தளுக்கு அரசு என - பாம்புகளுக்குத் தலைவனான ஆதிசேடனைப் போலவும்; பறவைக்கு அரசு என - பறவைகளுக்கு அரசனான கருடனைப் போலவும்; போந்து உருத்தது - சென்று அச்சத்தை ஊட்டியது.
உரு என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த வினைமுற்று உருத்தது என்னும் சொல். (உரு உட்கு ஆகும். தொல். சொல். உரி. 4)
ஆங்கிலம் · English translationAI
Translation
- The divine great weapon called Kāntaruppam
- the king of kings sped forth from his bow;
- like the king of serpents, like the lord of birds,
- the fiery war-arrow went forth and struck terror.
What the poem says
In answer to the hail of weapons, Irāmaṉ, king of kings, fires a divine missile called the Kāntaruppam, the weapon of the Gandharvas.
The fiery arrow flies out as terrifying as Ādiśeṣa, king of the serpents, and as Garuḍa, lord of the birds. Both are closely bound to Viṣṇu, which hints at the divine nature of the weapon and of the one who wields it.