கம்பராமாயணம் 9534 · யுத்த 30.183
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புரம் சுடும் ஒருவன் தோற்றத்த - முப்புரங்களை எரித்த சிவபிரானின் தோற்றம் கொண்டனவாய்; மூன்று கண் அமைந்தன - மூன்று கண் (முனை) பொருந்தியனவாகவும்; ஐம் முகத்தன - ஐந்து முகம் (முனை) பொருந்தியனவாகவும்; ஆன்ற மெய் தழலன - நிறைந்த தழல் உருவம் பொருந்தியனவாகவும்; புனலும் ஆடின - நீரில் தோய்ந்தனவாகவும்; வான் தொட நிமிர்வன - வானத்தைத் தொடுமளவுக்கு மேல் நோக்கி எழுவனவுமாக; வாளி மா மழை தோன்றின - அம்பின் பெருமழைகள் தோன்றின. காந்தருப்பக் கணை பல்வகை அம்புகளைப் பொழியும் தன்மை கொண்டது என்பது இப்பாடலால் பெறப்படும் செய்தி. இக்கணைக்கு நாரணன் தொடர்பு உண்டென்ற குறிப்பினை முன் பாடலும், சிவபிரான் தொடர்பு உண்டென்ற குறிப்பினை இப்பாடலும் தருகின்றன. தீயோர் இறந்து உகும் காலத்தில் தெய்வ சக்திகளெல்லாம் இணைந்து எதிர் நிற்கும் என்பது கவிஞர் குறிப்பு என்பது நோக்கத் தக்கது. முக்கண், ஐம்முகம், தழல் மெய், (கங்கைநீர்) ஆடுதல் ஆகியன சிவனுக்கு உரியன. அகோரம், ஈசானம், சத்தியோசாதம், தத்புருஷம், வாமனம் என்பன சிவபிரான் ஐந்து முகங்களின் பெயர்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having three eyes, having five faces,
- their whole bodies of flame, bathed in water too,
- rising up to touch the sky, great rains of arrows
- appeared, in the form of the one who burned the cities.
What the poem says
The Kāntaruppam weapon bursts into a vast shower of arrows that soar up to the sky. Each one takes on the likeness of Śiva, who burned the three cities: three points for his three eyes, five heads for his five faces, a body of fire, and wetness recalling the Gaṅgā that flows in his hair.
The previous verse linked the weapon to Viṣṇu and this one links it to Śiva. The poet suggests that when the wicked meet their end, all the divine powers unite against them.