கம்பராமாயணம் 9535 · யுத்த 30.184
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐ இரு கோடியர் அரக்கர் வேந்தர்கள் - பத்துக் கோடி அரக்க அரசர்களும்; வலி மொய் வீரர்கள் - வலிமை செறிந்த (அரக்க) வீரர்களும்; முற்றுற ஒழிய - முழுமையாக அழிந்திட; எய் எனும் மாத்திரத்து - எய் என்று சொல்லும் (நொடி) அளவில்; செய் தவத்து இராவணன் - செய்து சிறந்த தவங்களையுடைய இராவணனது; மூலச்சேனை அவிந்தது என்பர் - மூல பலப் படை அழிந்துவிட்டது என்று சொல்வார்கள்.
'செய்தவம்' என்ற வினைத்தொகை மேன்மேல் தொடர்ந்து பயன் விளைக்கும் என்பதைக் குறிக்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Ten crores of demon kings,
- and heroes of massive strength, so that all perished utterly,
- in the time it takes to say "Shoot!", they say, was quenched
- the Mūlam army of Irāvaṇaṉ of great penance.
What the poem says
The demon reserve army, the Mūlapalam, is wiped out in an instant. Ten crores of demon kings and countless mighty warriors perish in the time it takes to say the word for 'shoot'.
Irāvaṇaṉ is still called a man of great penance. His ascetic practice won him the boons that make him so powerful, and that power keeps bearing fruit.