கம்பராமாயணம் 9539 · யுத்த 30.188

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எல்லோம் எல்லோம் ஒன்றி வளைந்து இந் நெடியோனை
வல்லே வல்ல போர்வலி கொண்டு மலையோமேல்
வெல்லோம் வெல்லோம் ' என்றனன், வன்னி; மிடலோரும்,
'தொல்லோன் சொல்லே நன்று ' என, அஃதே துணிவுற்றார்.

பொருள் · Meaning in Tamil

எல்லோம் எல்லோம் - நாம் எல்லோரும் எல்லோரும்; ஒன்றி வளைந்து - ஒன்றாகச் சூழ்ந்து கொண்டு; இந்நெடியோனை - நெடியவனாகிய இவனை; வல்லே - விரைவிலே; வல்ல போர் வலி முற்றி - திறமை கொண்ட போர் வலிமையாலே சூழ்ந்துகொண்டு; மலையோமேல் - போர் செய்யாவிட்டால்; வெல்லோம் வெல்லோம் - வெல்ல மாட்டோம் வெல்ல மாட்டோம்; என்றனன் வன்னி - என்று வன்னி கூறினான்; மிடலோரும் - வலிமை கொண்ட மற்ற வீரர்களும்; தொல்லோன் சொல்லே நன்று என - பழமையான வீரனாகிய வன்னி சொல்லியதே நல்லது என்று; அஃதே துணிவுற்றார் - அவன் சொன்னபடியே செய்யத் துணிந்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'All of us, all of us, joined together, surrounding this tall one,
  2. swiftly, swiftly, with full fighting might, unless we fight thus,
  3. we will not win, we will not win', said Vaṉṉi; and the mighty ones,
  4. saying 'The old one's word is good', resolved upon that very course.

What the poem says

Vaṉṉi answers firmly that they must surround Irāmaṉ, here called the tall one, all together and quickly with their full strength. Otherwise they will never win.

The doubled words in his speech convey his urgency. The other warriors agree that the veteran's advice is sound and decide to follow it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ellōm ellōm oṉṟi vaḷaintu in neṭiyōṉai
vallē vallē pōr vali muṟṟi malaiyōmēl
vellōm vellōm ' eṉṟaṉaṉ, vaṉṉi; miṭalōrum,
'tollōṉ collē naṉṟu ' eṉa, aḵtē tuṇivuṟṟār.