கம்பராமாயணம் 9540 · யுத்த 30.189

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்னார் தாமும் - அங்ஙனம் துணிந்த அந்த அரக்கர்களும்; ஆர்கலி ஏழும் என ஆர்த்தார் - கடல்கள் ஏழும் ஒன்றாக முழங்கியது என்னும்படி ஆரவாரித்தனர்; 'மின் ஆர் வானம் இற்று உறும்' என்றே - மின்னல் பொருந்திய வானம் இற்று (நிலத்தை) அடையும் என்று சொல்லுமாறு; விளி சங்கம் - ஒலிக்கின்ற சங்குகளை; கொன்னே ஊதி - அச்சம் தோன்றுமாறு ஊதி; தோள் புடை கொட்டிக்கொடு - தோள்களைப் பக்கமாகக் கொட்டிக்கொண்டு; சார்ந்தார் - போர் செய்ய வந்து சேர்ந்தனர்; வையம் என் ஆம் - நிலவுலகம் என்ன ஆகுமோ; என் படும் வானம் - வானுலகம் என்ன பாடு படப்போகிறதோ; திசை ஏதாம் - (நிலை பெற்றுள்ள) திசைகள்தான் என்ன ஆகுமோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. And they too roared, like all seven seas together;
  2. so that men said 'The lightning-filled sky will snap and fall', they blew
  3. their calling conches fearsomely and, slapping their shoulders, came on;
  4. what would become of the earth? what would befall the sky? what of the directions?

What the poem says

Having agreed to attack together, the demon champions roar like all seven oceans at once. They blow their conches so terrifyingly that it seems the lightning-streaked sky might crack and come crashing down.

They slap their shoulders in the warrior's challenge and close in. The poet ends by asking what will become of earth, heaven and the directions in such a clash.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉārtāmum, ārkali ēḻum eṉa ārttār;
'miṉ ār vāṉam iṟṟu uṟum 'eṉṟē, viḷi caṅkam
koṉṉē ūti, tōḷ puṭai koṭṭikkoṭu cārntār,
eṉ ām, vaiyam? eṉpaṭum; vāṉam? ticai ētām?