கம்பராமாயணம் 9541 · யுத்த 30.190

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆர்த்தார் அன்னார்; அன்ன களத்தே அவர் ஆற்றல்
தீர்த்தானும், தன் வெஞ்சிலை நாணைத் தெறிப்புற்றான்;
பேர்த்தான் பொன் தோள் முற்றும் அளந்தான் பிறழ்சங்கம்
ஆர்த்தால் ஒத்தது அவ் ஒலி எல்லா உலகுக்கும்.

பொருள் · Meaning in Tamil

அன்னார் - அந்த அரக்கர்கள்; ஆர்த்தார் - ஆரவாரம் செய்தார்கள்; அன்ன கணத்தே - அந்தக் கணத்திலேயே; அவர் ஆற்றல் தீர்த்தானும் - அவர்களின் ஆற்றலை அழித்தவனாகிய இராமனும்; தன் வெஞ்சிலை நாணைத் தெறிப்புற்றான் - தன்னுடைய கொடிய வில்லின் நாணைத் தெறித்தான்; அவ் ஒலி - அப்போது எழுந்த ஒலியானது; பொன் தாள் பேர்த்தான் - தன் பொற்கால்களைப் பெயர்த்தவனாய்; முற்றும் அளந்தான் - எல்லா உலகங்களையும் அளந்தவனாகிய திருமால் (கரத்தில் ஏந்தும்); பிறழ் சங்கம் - விளங்குகின்ற சங்கு; ஆர்த்தால் ஒத்தது - ஆரவாரித்ததைப் போன்றிருந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They roared; at that same moment he who had drained their strength
  2. plucked the string of his cruel bow;
  3. that sound was like the roar of the gleaming conch
  4. of him who lifted his golden foot and measured all.

What the poem says

As the demons roar, Irāmaṉ answers by twanging the string of his bow. Its sound fills every world.

It is compared to the blast of the shining conch held by Tirumāl, who in his dwarf incarnation lifted his golden foot and measured out all the worlds in three strides. Once again the poet quietly identifies Irāmaṉ with Viṣṇu.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ārttār aṉṉār; aṉṉa kaṇattē avar āṟṟal
tīrttāṉum, taṉ veñ cilai nāṇait teṟippuṟṟāṉ;
pērttāṉ poṉ tōḷ muṟṟum aḷantāṉ piṟaḻ caṅkam
ārttāl ottatu av oli ellā ulakukkum.