கம்பராமாயணம் 9545 · யுத்த 30.194
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1விண்தீய வழங்கிய வெம் படையில்
சுட்டீய நிமிர்ந்த சுடர்ச் சுடரும்
கண்தீயும் ஒருங்கு கலந்து எழலால்
உள் தீ உற வெந்தன ஏழ் உலகும்.
பொருள் · Meaning in Tamil
விட்டீய - (பகைவர்கள் களத்தை) விட்டோடுமாறு; வழங்கிய வெம்படையின் - செலுத்தப்பட்ட கொடிய படைக்கலங்கள்; சுட்டீய - சுடும்படியாக; நிமிர்ந்த சுடர்ச் சுடரும் - ஓங்கி வளர்ந்த சுடருடைய நெருப்பும்; கண் தீயும் - (கோபத்தால்) கண்ணிலிருந்து தோன்றும் கோபத்தீயும்; ஒருங்கு கலந்து எழலால் - ஒன்றாகச் சேர்ந்து மேல் எழுவதனால்; ஏழ் உலகும் - ஏழு உலகங்களும்; தீ உள் உற வெந்தன - நெருப்பு உள்புகுந்து மிகுவதால் வெந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The cruel weapons loosed to drive the foe from the field,
- the towering, blazing fire that rose to burn,
- and the fire from their eyes, rising all mingled together,
- so that the fire entered within, the seven worlds were scorched.
What the poem says
The demons' weapons blaze with flame, and their eyes burn with the fire of rage. The two kinds of fire rise up and merge into one.
The heat is so intense that it seems to enter the seven worlds and scorch them from within.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṇtīya vaḻaṅkiya vem paṭaiyiṉ
cuṭṭīya nimirnta cuṭarc cuṭarum
kaṇ tīyum oruṅku kalantu eḻalāl
uḷ tī uṟa ventaṉa ēḻ ulakum.