கம்பராமாயணம் 9546 · யுத்த 30.195

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேர் ஆர்ப்பு ஒலி வீரர் தெழிப்பு ஒலியும்
தார் ஆர்ப்பு ஒலியும் கழல் தாக்கு ஒலியும்
போரால் சிலை நாணி புடைப்பு ஒலியும்
காரால் பொலியும் களிறு ஆர்ப்பு ஒலியும்.

பொருள் · Meaning in Tamil

தேர் ஆர்ப்பு ஒலி - (ஓடும்) தேர்களின் ஆரவாரமான ஒலியும்; வீரர் தெழிப்பு ஒலியும் - போர் வீரர்கள் அதட்டுகின்ற ஒலியும்; தார் ஆர்ப்பு ஒலியும் - கிண்கிணி மாலைகளின் ஆரவார ஒலியும்; கழல் தாக்கு ஒலியும் - வீரக் கழல்கள் மோதுதலால் எழுகின்ற ஒலியும்; போர் ஆர் சிலை நாணி புடைப்பு ஒலியும் - போருக்கெனப் பொருந்திய வில்லின் நாணினைத் தெறித்தலால் எழுகின்ற ஒலியும்; காரால் பொலியும் - கருநிறத்தோடு அழகாக விளங்குகின்ற; களிறு ஆர்ப்பு ஒலியும் - யானைகளின் ஆரவார ஒலியும் (போர்க்களத்திலே கலந்து ஒலித்தன;)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The roaring sound of chariots, the sound of warriors' threats,
  2. the ringing sound of the bell-garlands, the clashing sound of anklets,
  3. the sound of war-bowstrings being plucked,
  4. and the roaring sound of elephants dark and splendid as clouds.

What the poem says

This verse is a catalogue of the noises of battle, all mixing together on the field: the rumble of chariots, warriors shouting threats, the jingle of the bell-garlands worn by men and beasts, the clash of heroes' anklets, the twang of bowstrings, and the trumpeting of elephants as dark as rain clouds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēr ārppu oli vīrar teḻippu oliyum
tār ārppu oliyum kaḻal tākku oliyum
pōr ār cilai nāṇi puṭaippu oliyum
kārāl poliyum kaḷiṟu ārppu oliyum.