கம்பராமாயணம் 9554 · யுத்த 30.203
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1தாமச் சுடர் வாளி தடிந்து அகலப்
பாமக் குருதிப் படிகின்ற படைச்
சேமப் படர் கேடகம் மால்கடல் சேர்
ஆமைக் குலம் ஒத்தன அத்தனையால்.
பொருள் · Meaning in Tamil
தாமச்சுடர் வாளி - பேரொளி வீசும் அம்புகளால்; தடிந்து அகல - துணிபட்டு விழுவதால்; பாமக் குருதி படிகின்ற - பரவிய குருதியில் படிகின்ற; படைச் சேமப் படு கேடகம் - படையைப் பாதுகாத்திடும் வீரர்கள் அணிந்த கேடயங்கள்; மால் கடல் சேர் - பெரிய கடலைச் சேர்ந்த; ஆமைக்குலம் அத்தனை ஒத்தன - ஆமைக் கூட்டம் எத்தனை உண்டோ அத்தனையையும் ஒத்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the arrows of great brightness cut them and they fell away,
- the shields borne by those who guard the army,
- sinking in the spreading blood, were like
- all the tortoises there are that belong to the great sea.
What the poem says
Irāmaṉ's dazzling arrows cut through the warriors who protect the army, and their round shields drop into the spreading pool of blood.
The countless shields floating and sinking there look like every tortoise in the great ocean. The image adds another creature to the poet's picture of the battlefield as a sea.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāmac cuṭar vāḷi taṭintu akala
pāmak kurutip paṭikiṉṟa paṭaic
cēmap paṭu kēṭakam māl kaṭal cēr
āmaik kulam ottaṉa attaṉaiyāl.