கம்பராமாயணம் 9555 · யுத்த 30.204
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1காம்போடு பதாகைகள் கார் உதிரப்
பாம்போடு கடல் படிவுற்றனவால்
வாம் போர் நெடு வாடை மலைந்த கலம்
கூம்போடு உயர் பாய்கள் குறைந்தன போல்.
பொருள் · Meaning in Tamil
வாம் போர் நெடு வாடை மலைந்து - தாவும் போரிலே நெடிய வாடையால் தாக்கப்பட்ட; கலம் - மரக்கலம்; கூம்போடு உயர் பாய்கள் - கூம்பு என்னும் மரத்திலே கட்டப்பட்ட பாய்கள்; குறைந்தன போல் - சிதைவுற்றன போல்; காம்போடு பதாகைகள் கார் - காம்போடு கொடிகள் சுமந்த முகில் போன்ற யானைகள்; உதிரப் பாம்போடு கடல் - இரத்தமாகிய பரவியோடும் கடலிலே; படிவுற்றன - படிந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With their poles, the banners, and the cloud-dark ones,
- sank in the sea of spreading blood,
- like ships whose tall sails, with the masts,
- are torn to pieces when the long north wind assails them in its leaping fight.
What the poem says
The great elephants, dark as clouds, carry banners on tall poles. As they sink into the flowing sea of blood, the banners and poles go down with them.
The sight is like ships in a gale. A furious north wind attacks them and rips their high sails apart along with the masts.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāmpōṭu patākaikaḷ kār utirap
pāmpōṭu kaṭal paṭivuṟṟaṉavāl
vām pōr neṭu vāṭai malaintu akala
kūmpōṭu uyar pāykaḷ kuṟaintaṉa pōl.