கம்பராமாயணம் 9556 · யுத்த 30.205

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மண்டப் படு சோரியின் வாரியின்வீழ்
கண்டத்த சரத் தொகை கவ்வியதாள்
முண்டக் கிளர்தண்டின முள்தொகுவன்
துண்டச் சுறவு ஒத்த துடித்தனவால்.

பொருள் · Meaning in Tamil

மண்டப்படு சோரியின் வாரியின் - பெருகி வருகின்ற குருதி வெள்ளத்திலே; வீழ் - துண்டிக்கப்பட்டு விழுந்துவிட்ட; கண்டத் தொகை கவ்விய காலொடு தோள் - சதைத்துண்டுகள் மிகுந்தனவாய்க் கவ்வப்பட்ட கால்களும் தோள்களும்; முண்டத் திரி தண்டின் - தாமரையின் திரிக்கப்பட்ட தண்டினைப் போல; முரட்டு ஒருவன் துண்டச்சுறவு - முரடான ஒரு வலிய சதைப் பிண்டமாகவுள்ள சுறாமீன்களை; ஒத்தன - ஒப்புடையனவாகி, துடித்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Falling into the sea of blood that surged and swelled,
  2. the legs and shoulders gripped by lumps of flesh,
  3. like a lotus stalk twisted, like a coarse
  4. mass of shark cut into pieces, writhed and quivered.

What the poem says

Severed legs and shoulders lie in the rising flood of blood, still twitching, with lumps of flesh clinging to them.

They look like twisted lotus stalks, and like hacked chunks of a great shark still quivering in the water.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇṭap paṭu cōriyiṉ vāriyiṉ vīḻ
kaṇṭat tokai kavviya kāloṭu tōḷ
muṇṭat tiri taṇṭiṉ muraṭṭu oruvaṉ
tuṇṭac cuṟavu otta tuṭittaṉavāl.