கம்பராமாயணம் 9557 · யுத்த 30.206

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தெளிவுற்ற பளிங்கு உறு சில்லிகொள்தேர்
விளிவு உற்று உக வேறு உற வீழ்வனதாம்
அளிமுற்றிய சோரியின் ஆழியின் ஆழ்
ஒளிமுற்றிய திங்களை ஒத்துளவால்.

பொருள் · Meaning in Tamil

தெளிவுற்ற பளிங்கு உறு சில்லி கொள் தேர் - ஒளித் தெளிவு கொண்ட பளிங்கு போன்ற சக்கரங்களைக் கொண்ட தேர்கள்; விளிவுற்று உக - அழிந்து சிதறுவதால்; வேறு உற வீழ்வனதாம் - தனித்தனியே விழுகின்ற அந்தச் சக்கரங்கள்; அளி முற்றிய - அம்புகள் நிரம்பிக் காணப்படுகின்ற; சோரியின் வாரியின் - குருதிக் கடலிலே; ஆழ் - அமிழ்கின்ற; ஒளி முற்றிய திங்களை ஒத்தன - ஒளி நிறைவுற்ற சந்திரனைப் போல் காணப்பட்டன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The chariots with wheels of clear crystal
  2. were destroyed and scattered; the wheels that fell apart,
  3. sinking in the sea of blood thick with arrows,
  4. were like the moon at its fullest brightness.

What the poem says

The demons' chariots have wheels that shine like clear crystal. When Irāmaṉ's arrows smash them, the wheels come loose and roll off on their own.

As they sink into the sea of blood, which is crowded with arrows, they gleam like the full moon reflected in the sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1teḷivuṟṟa paḷiṅku uṟu cillikoḷ tēr
viḷivuṟṟuka vēṟuṟa vīḻvaṉatām
aḷi muṟṟiya cōriyiṉ vāriyiṉ āḻ
oḷi muṟṟiya tiṅkaḷai ottuḷavāl.