கம்பராமாயணம் 9558 · யுத்த 30.207
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1நிலைகோடல் இல் வென்றி அரக்கரை நேர்
கொலைகோடல் நமன் குறி கோளுறுமே?
சிலைகோடிய தோறும் சிரத்திரள் வன்
மலை கோடியின்மேலும் மறிந்திடுமால்.
பொருள் · Meaning in Tamil
நிலை கோடல் இல் வென்றி - நிலைகொள்ளுதல் இல்லாத வெற்றியை உடைய; அரக்கரை - அரக்கர்களை; நேர் கொலை கோடலின் - நேராக எதிர்த்துக் கொலை செய்வதில்; மன் - தலைவனாகிய இராமன்; குறிகோள் உறுமேல் - குறிக்கொள்வானாதலின்; சிலை கோடியதோறும் - இராமனின் வில் வளையும் போதெல்லாம்; சிரத்திரள் வன் மலை - அரக்கர் தலைகளின் கூட்டமாகிய மலைத் திரள்; கோடியின் மேலும் மறிந்திடும் - கோடிக்குமேல் விழும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Since the king took aim to slay in straight fight
- the demons whose victories never let foes stand,
- each time the bow was bent, a mighty mountain
- of massed heads fell, more than a crore.
What the poem says
Irāmaṉ, the king, aims to kill the demons in open combat. These are warriors whose victories never left an enemy standing.
Every time he draws his bow, so many heads roll that they pile up like a mountain range, more than a crore of them at each draw.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nilai kōṭal il veṉṟi arakkarai nēr
kolai kōṭaliṉ maṉ kuṟi kōḷuṟumēl
cilai kōṭiyatōṟum cirat tiraḷ vaṉ
malai kōṭiyiṉ mēlum maṟintiṭumāl.