கம்பராமாயணம் 9560 · யுத்த 30.209
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1பாறு ஆடு களத்து ஒருவன் பகலின்
கூறு ஆகிய நாலில் ஒர் கூறு இடையே
நூறாயிர யோசனை நூழில்களால்
மாறாது உழல் சாரிகை வந்தனனால்.
பொருள் · Meaning in Tamil
பாறு ஆடு களத்து - பருந்துகள் பறக்கின்ற போர்க்களத்தில், பகலின் கூறு ஆகிய நாலில் ஓர் கூறிடையே - பகற் பொழுதின் நான்கில் ஒரு பங்காகிய காலப் பகுதியிலே; நூறு ஆகிய யோசனை - நூறு யோசனைப் பரப்பினதாக இருந்த; நூழில் களம் - பகைவரைக் கொன்று குவிப்பதற்கு உரிய களத்திடையே; ஒருவன் - தனி ஒருவனாகிய இராமபிரான்; மாறாது - பிறழ்ச்சி இல்லாமல்; உழல் சாரிகை வந்தனன் - சுழலும் சாரிகை திரிந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the field where kites wheel, the one man, within
- a single part of the day's four parts,
- in a slaughter-field that stretched a hundred yojanas,
- went round, never faltering, in the wheeling circle.
What the poem says
Irāmaṉ, fighting alone, sweeps around a battlefield a hundred yojanas wide, which is an immense distance, while kites wheel overhead.
In just one quarter of a single day he completes the full circling movement of a warrior across the whole killing ground without once breaking his rhythm.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāṟu āṭu kaḷattu oruvaṉ pakaliṉ
kūṟu ākiya nālil ōr kūṟiṭaiyē
nūṟu āyiṉa yōcaṉai nūḻilkaḷam
māṟātu uḻal cārikai vantaṉaṉāl.