கம்பராமாயணம் 9562 · யுத்த 30.211
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இங்கே உளன் இங்கு உளன் இங்கு உளன் என்று - (இராமபிரான் விரைவாகச் சாரி சுழன்று இலங்குவதால், அவன் எங்கும் இருப்பவனாய்த் தோற்றம் அளித்தான் அதனால் இராமன் இங்கே இருக்கிறான் இதோ இருக்கிறான், இங்குத்தான் இருக்கிறான் என்று); அங்கே உணர்கின்ற அலந்தலைவாய் - அங்கங்கே இருப்பவனாக உணர்கின்ற கலக்கத்தால்; வெங் கோப நெடும்படை - கொடிய கோபத்தால் பயன்படுத்துகின்ற நெடிய வில்லாகிய படைக்கலத்திலிருந்து; வெஞ்சரம் விட்டு - கொடிய அம்புகளை எய்து; எங்கேனும் வழங்குவர் - எந்தத் திசையிலும் வழங்கினராய், ஏகுவர் - (அத்திசையிலே இராமனைத் தாக்க முடியாமல் வேறு பக்கம்) போவார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He is here! He is here! He is here!' so they cried,
- in the confusion of sensing him there and there,
- and loosing cruel arrows from their long bows of fierce wrath,
- they would shoot in any direction, and move on.
What the poem says
Irāmaṉ wheels about so fast that he seems to be everywhere at once. The bewildered demons keep shouting that he is here, then here, then over here.
In their confusion they loose angry volleys from their great bows in every direction. Finding he is not there after all, they rush off somewhere else.