கம்பராமாயணம் 9563 · யுத்த 30.212
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இரவு அன்று இது - (இது நிசாசரராகிய நமக்கு ஏற்ற) இரவு அன்று இது; ஓர் பகல் - பகல் நேரமாகும்; என்பர்கள் - என்று தமக்குள் சொல்லிக்கொள்வார்கள்; ஒருவன் என உன்னும் உணர்ச்சி இலார் - தங்கள் அனைவரையும் எதிர்த்துப் போர் செய்பவன் ஒருவன்தான் என்று கருதும் உணர்ச்சி அற்றவர்களாய்; கரவு அன்று இது - இது வஞ்சனைப் போர் அன்று; இராமர் கணக்கு இலர் - எத்தனை இராமர்கள் என்று அளவிட முடியாத அளவுக்கு இராமர்கள் பலராவர்; பரவை மணலின் பலர் என்பார்கள் - கடல் மணலை விட அதிகமானவர்கள் இராமர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You who lack the sense to think he is but one!
- This is not night, this is day', so they would say;
- 'This is no trick; the Irāmaṉs are past counting;
- they are more than the sands of the sea', so they would say.
What the poem says
The demons are night-walkers whose strength is greatest in the dark, and they remind each other that it is daytime, a time that does not favour them.
Unable to believe one man could be doing all this, they insist that it is no trick: there are countless Irāmaṉs, more than the grains of sand on the seashore.