கம்பராமாயணம் 9566 · யுத்த 30.215

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்னும்படி எங்கணும் எங்கணுமாய்த்
துன்னும்; சுழலும்; திரியும்; சுடரும்;
பின்னும் அருகும் எதிரும் பிரியான்
மன்னன்மகன்! வீரர் மயங்கினரால்.

பொருள் · Meaning in Tamil

என்னும்படி - என்று சொல்லும்படியாக; மன்னன் மகன் - தசரதன் மகனாகிய இராமன்; எங்கணும் எங்கணுமாய் - எங்கெங்குமாகி; துன்னும் - நெருங்குவான்; சுழலும் - சுற்றுவான்; திரியும் - அலைவான்; சுடரும் - ஒளிர்வான்; பின்னும் - பின்புறத்திலும்; அருகும் - பக்கத்திலும்; உடலும் - உடலிலும்; பிரியான் - பொருதலை விட்டுப் பிரியான்; வீரர் மயங்கினார் - (இந்த நிலை கண்டு) அரக்க வீரர் கலங்கினர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that they said this, everywhere, everywhere,
  2. he pressed close, whirled, moved about, blazed;
  3. behind them, beside them, upon their bodies, he never left them,
  4. the king's son! and the warriors were bewildered.

What the poem says

This completes the previous verse. Irāmaṉ, son of King Tacarataṉ, is everywhere at once. He closes in, spins, roams and blazes like a flame.

He is behind them, beside them and right upon them, and never lets them be. The demon warriors are left utterly bewildered.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṉumpaṭi eṅkaṇum eṅkaṇumāyt
tuṉṉum; cuḻalum; tiriyum; cuṭarum;
piṉṉum arukum uṭalum piriyāṉ
maṉṉaṉ makaṉ! vīrar mayaṅkiṉarāl.