கம்பராமாயணம் 9567 · யுத்த 30.216

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1படு மத கரி, பரி, சிந்தின; பனி வரை இரதம் அவிந்தன;
விடுதிசை செவிடு பிளந்தன; விரிகடல் அளறது எழுந்தன;
அடு புலி அவுணர்தம் மங்கையர் அலர்விழி அருவிகள் சிந்தின
கடு மணி நெடியவன் வெஞ்சிலை, 'கண கண, கண கண 'எனும் தொறும்.

பொருள் · Meaning in Tamil

நெடியவன் வெஞ்சிலை - இராமபிரான் கொடிய வில்லில் உள்ள; கடுமணி - கடுமையான ஓசையை எழுப்பும் மணிகள்; கண கண கண கண எனும்தொறும் - கண கண கணகணவென்று ஓசை செய்யும்போதெல்லாம்; மதம் படு கரி, பரி சிந்தின - மதம் பொழியும் யானைகளும் குதிரைகளும் அழிந்தன; பனி வரை இரதம் அவிந்தன - பனி படியும் மலைபோல் உயர்ந்த தேர்கள் அழிந்தன; விடு படை திசைகள் பிளந்தன - இராமன் விடுக்கின்ற கணைகள் திசைகளைப் பிளந்தன; விரி கடல் அளறு (அது) எழுந்தன - அகன்ற கடலிலே சேறுகள் எழுந்தன; அடுபுலி அவுணர்தம் - கொல்லும் புலிபோல்வராகிய அரக்கர்களின்; மங்கையர் அலர் விழி - பெண்டிரின் மலர்ந்த விழிகளில்; அருவிகள் சிந்தின - கண்ணீர் அருவிகளைச் சிந்தின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Rutting elephants and horses were scattered; chariots like snowy mountains were destroyed;
  2. the loosed weapons split the directions; the wide seas rose up as mire;
  3. from the blooming eyes of the women of the demons, killing tigers, streams of tears fell,
  4. each time the harsh bells on the tall one's cruel bow rang 'kaṇakaṇa, kaṇakaṇa'.

What the poem says

Irāmaṉ's bow is hung with bells that ring each time he draws it. The repeated sound kaṇakaṇa runs through the verse like a refrain.

At every ring, rutting elephants and horses fall, chariots as tall as snowy peaks are smashed, his arrows split the directions and the seas are churned to mud. Far away the wives of the demon warriors, fierce as tigers, weep floods of tears for their dead husbands.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭu mata kari, pari, cintiṉa; paṉi varai iratam avintaṉa;
viṭu paṭai ticaikaḷ piḷantaṉa; viri kaṭal aḷaṟatu eḻuntaṉa;
aṭu puli avuṇartam maṅkaiyar alar viḻi aruvikaḷ cintiṉa
kaṭumaṇi neṭiyavaṉ veñcilai, 'kaṇakaṇa, kaṇakaṇa 'eṉumtoṟum.