கம்பராமாயணம் 9570 · யுத்த 30.219

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காய் இருஞ் சிலை ஒன்றேனும், கணைப் புட்டில் ஒன்றதேனும்,
தூயெழும் பகழி மாரி மழைத் துளித் தொகையின் மேல;
ஆயிரம் கைகள் செய்த செய்தன, அமலன் செங்கை;
ஆயிரம் கையும் கூடி, இரண்டு கை ஆய அன்றே.

பொருள் · Meaning in Tamil

காய் இருஞ்சிலை ஒன்றேனும் - பகைவரைச் சினக்கின்ற பெரிய வில் ஒன்றே எனினும்; கணைப் புட்டில் ஒன்றதேனும் - அம்பறாத் தூணியும் ஒன்றுதான் என்றாலும்; தூய் எழு பகழி மாரி - எங்கெங்கும் தூவிப் பெருகுகின்ற அம்பு மழை; மழைத் துளித் தொகையின் மேல - மழைத் துளிகளின் எண்ணிக்கைக்கு மேலாக; அமலன் செங்கை - குற்றமற்றவனாகிய இராமனின் செம்மைக் கைகள்; ஆயிரம் கைகள் செய்த செய்தன - ஆயிரம் கைகள் கூடிச் செய்த செயல்களைச் செய்தன; ஆயிரம் கைகள் கூடி இரண்டு கை ஆனது அன்றே - (திருமாலின்) ஆயிரம் கைகளும் கூடி (இராமபிரானின்) இரண்டு கைகள் ஆயின அல்லவோ!

இராமன் திருமாலே என்பதை மனங்கொண்டது இச்செய்யுளின் கற்பனை. ஆயிரங்கை கொண்ட பரமனே இரண்டு கை இராமனாக வந்தான் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Though the fierce bow was only one, though the quiver of arrows was only one,
  2. the rain of arrows that sprang out scattering was more than the count of raindrops;
  3. the red hands of the pure one did what a thousand hands would do;
  4. a thousand hands, it seems, had joined and become two hands.

What the poem says

Irāmaṉ has only one bow and one quiver, yet the arrows he scatters outnumber the drops of rain in a storm.

His two hands do the work of a thousand. The poet suggests that the thousand arms of the supreme Lord Tirumāl have joined together to become the two arms of Irāmaṉ, so the supreme god himself has come down as a two-armed man.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāy aruñ cilai oṉṟēṉum, kaṇaip puṭṭil oṉṟatēṉum,
tūm eḻu pakaḻi māri maḻait tuḷit tokaiyiṉ mēla;
āyiram kaikaḷ ceyta ceytaṉa, amalaṉ ceṅkai;
āyiram kaiyum kūṭi, iraṇṭu kai āṉatu aṉṟē.