கம்பராமாயணம் 9571 · யுத்த 30.220

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொய், ஒருமுகத்தன் ஆகி மனிதன் ஆம்புணர்ப்பு இது என்றல்;
மெய்யுற உணர்ந்தோம்; வெள்ளம் ஆயிரம் மிடைந்த சேனை
செய்யுறு வினையம் எல்லாம் ஒருமுகம் தெரிவது உண்டே?
ஐ இரு நூறும் அல்ல; அனந்தம் ஆம் முகங்கள் அம்மா!

பொருள் · Meaning in Tamil

ஒரு முகத்தன் ஆகி - ஒரே முகம் உடையவனாய், மனிதன் ஆம் புணர்ப்பு இது அன்று - இது மனிதனாகக் காணும் தோற்றம் அன்று; பொய் - (நாம் காணும் இத்தோற்றம்) பொய்யே; மெய்யுற உணர்ந்தோம் - இந்த மெய்யை மிகுதியாக உணர்ந்துவிட்டோம்; வெள்ளம் ஆயிரம் மிடைந்த சேனை - ஆயிர வெள்ளம் அளவுக்குச் செறிந்துள்ள அரக்கர் சேனையானது; செய்யுறு வினையம் எல்லாம் - செய்கின்ற (போர்ச்) செயலையெல்லாம்; ஒரு முகம் தெரிவது உண்டோ - ஒரே முகம் கொண்டவனால் தெரிந்து கொள்ள முடியுமா! (முடிந்திருக்கிறதே.) ஐ இரு நூறும் அல்ல - (இவனுக்கு உரிய உண்மையான முகங்கள்) ஆயிரம் என்பதும் உண்மை அன்று; முகங்கள் அனந்தம் ஆம் - (உண்மையில் இவனுக்குரிய முகங்களுக்கு முடிவே இல்லை.)

அம்மா - வியப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'False; this is no human form that wears a single face;
  2. we have understood the truth; all the deeds of war done by the army
  3. packed a thousand vellams deep, can one face perceive them all?
  4. not ten times a hundred, but endless are his faces, oh!'

What the poem says

The onlookers decide that Irāmaṉ's human appearance with a single face is an illusion. How could someone with only one face take in every move of an army a thousand vellams strong and answer each one?

They conclude that he does not have one face, or even the thousand faces of the cosmic Lord described in the scriptures. His faces are beyond counting. The final 'ammā' is a cry of wonder.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poy, oru mukattaṉ āki maṉitaṉ ām puṇarppu itu aṉṟāl;
meyyuṟa uṇarntōm; veḷḷam āyiram miṭainta cēṉai
ceyyuṟu viṉaiyam ellām oru mukam terivatu uṇṭē?
ai irunūṟum alla; aṉantam ām mukaṅkaḷ ammā!