கம்பராமாயணம் 9572 · யுத்த 30.221
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கண்ணுதல் பரமன் தானும் - கண்ணை நெற்றியில் கொண்ட, பரமனாகிய சிவனும்; நான்முகக் கடவுள்தானும் - நான்முகனாகிய கடவுளும்; தொடர எய்த கோல் எண்ணுதும் என - இராமபிரான் தொடர்ந்து எய்கின்ற அம்புகளை எண்ணிக் கணக்கிடுவோம் என்று; எண்ணலுற்றார் - கணக்கிடத் தொடங்கினவர்களாய்; பண்ணையால் பகுக்க மாட்டார் - அம்புகள் தொகுதி தொகுதியாய்ப் பாய்தலால் பிரித்து எண்ண முடியாமல்; உவகையின் உயர்ந்த தோளார் - மகிழ்ச்சியால் ஓங்கிய தோள்களை உடையவர்களாய்; 'ஒண்ணுமோ கணிக்க' என்பார் - கணக்கிட முடியுமோ என்று சொல்லினார்கள்.
அம்புகளை எண்ணமுடியாமல் தோற்றாலும் இராமனது வில்லாற்றல் சிவனுக்கும் நான்முகனுக்கும் மகிழ்ச்சி தந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The supreme one with the eye on his brow, and the four-faced god,
- thinking 'Let us count the arrows he shoots in succession', set about counting;
- unable to separate them, since they came in masses, they looked at them one by one,
- and said 'Can they be counted?', their shoulders swelling with joy.
What the poem says
Śiva, who has an eye in the middle of his forehead, and Brahmā, the four-faced creator, try to count the arrows Irāmaṉ keeps firing.
The arrows fly in such dense clusters that they cannot be told apart, and the two gods have to give up and ask whether counting them is even possible. Their failure only adds to their joy. Their shoulders swell with delight at Irāmaṉ's archery.