கம்பராமாயணம் 9575 · யுத்த 30.224
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கடக்கல் உற்ற - கடந்து போகின்ற; சண்டப்போர் அரக்கர் தம்மை - கொடுமையாகப் போர் செய்யும் அரக்கர்களை; தொடர்ந்து - பின் தொடர்ந்து; கண்டத்தும் - அவர்களுடைய கழுத்திலும்; கீழும் மேலும் - அவர்தம் உடம்பின் கீழும் மேலும்; கபாலத்தும் - தலை ஓட்டிலும், கோல் புணரும் தன்மை - அம்புகள் சென்று சேர்ந்த தன்மை; பிண்டத்தில் கருவாம் தன் பேர் உருக்களை - பிண்டத்திலே கருவாகியுள்ளதன் பெரிய படைப்புகளை; அண்டத்தை நிறையப் பெய்து - அண்டம் நிறையும்படியாக இட்டு; குலுக்கியது அனைய ஆன - குலுக்கப் பட்டவை போல அமைந்தன.
பல இடங்களிலும் கடந்து போகின்ற அரக்கர்களை கழுத்து, மேல் கீழ் என்று எல்லா இடங்களிலும் அம்புகள் சென்று கலக்கின்றன. பிண்டத்தில் கருவாகிய உருக்களைப் பிரமன் பேரண்டத்திலே நிறைய இட்டு நிரப்பிய தன்மை போல - அம்புகள் கருக்கள்; அம்புகள் கீழ் மேல் இடை எங்கும் அரக்கர்களோடு கலந்து நிரம்பியுள்ளவை. கருக்களாகிய உருக்களும் அண்டம் நிறையப் பெய்யப் பெற்றுள்ளன போலும் எனப் பொருத்துக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the neck, below and above, and in the skull, the way
- the arrows pursued the fierce fighting demons who tried to get past,
- and joined with them, was like Piramaṉ filling the universe he made
- with the great forms that are embryos in the womb, and shaking it.
What the poem says
Irāmaṉ's arrows chase the fleeing demons and lodge in them everywhere: in the neck, high and low on the body and in the skull.
The poet compares this to Brahmā the creator packing the cosmic egg full of the embryos of all beings and shaking it, so that they are mixed everywhere. The arrows are like those embryos, crammed into and spread through the demon host.