கம்பராமாயணம் 9576 · யுத்த 30.225

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கோடி ஐ இரண்டு தொக்க படைக்கல மள்ளர் கூவி,
ஓடி ஓர் பக்கம் ஆக, உயிர் இழந்து, உலத்தலோடும்,
'வீடிநின்று அழிவது என்னே! விண்ணவர் படைகள் வீசி,
மூடுதும் இவனை 'என்னா, யாவரும் மூண்டு மொய்த்தார்.

பொருள் · Meaning in Tamil

ஐ இரண்டு கோடி தொக்க - பத்துக் கோடிப் பேராகக் கூடி நின்ற, படைக்கல மள்ளர் - படைக்கலங்களை ஏந்திய வீரர்கள்; கூவி - ஆரவாரித்து; ஓர் பக்கம் ஆக ஓடி - ஒரு பக்கத்தில் ஓடிச் சென்று; உயிர் இழந்து உலத்தலோடும் - உயிரை இழந்து அழிந்த நிலையில்; வீடி நின்று அழிவது என்னே! விண்ணவர் படைகள் வீசி மூடுதும் இவனை என்று - வீழ்ச்சி பெற்று அழிவது ஏன்? தேவர்களிடம் பெற்ற படைக்கலங்களை எறிந்து இந்த இராமனை முற்றிலுமாக மறைத்து விடுவோம் (மறைத்து அழித்திடுவோம்) என்று; யாவரும் மூண்டு மொய்த்தார் - எஞ்சியிருந்த அரக்கர் எல்லாரும் பொங்கிச் செறிந்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the warriors with weapons, gathered ten crores strong, crying out,
  2. running to one side, lost their lives and perished,
  3. 'Why stand here falling and being destroyed? Hurling the weapons of the gods,
  4. let us bury this man', so saying, all of them surged and crowded in.

What the poem says

Ten crores of armed demon warriors charge to one side with a shout and are killed. The survivors ask why they should simply stand there to be slaughtered.

They decide to use the divine weapons they once received from the gods to bury Irāmaṉ under them and destroy him. All the remaining demons surge forward together.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōṭi ai iraṇṭu tokka paṭaikkala maḷḷar kūvi,
ōṭi ōr pakkam āka, uyir iḻantu, ulattalōṭum,
'vīṭi niṉṟu aḻivatu eṉṉē! viṇṇavar paṭaikaḷ vīci,
mūṭutum ivaṉai 'eṉṟu, yāvarum mūṇṭu moyttār.