கம்பராமாயணம் 9578 · யுத்த 30.227

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தான் அவை தொடுத்தபோது - தானே அந்தத் தெய்வப் படைகளைத் தொடுத்தால், தடுப்ப அரிது - எவராலும் தடுத்து நிறுத்தல் அரிதாகும்; உலகம் தானே வடவைத் தீயின் பூ நனி புக்கெனப் பொரிந்துபோம் - உலகம் வடவை (ஊழிக்கால) நெருப்பிலே மலர் புகுந்தது போலப் பொரிந்து போகும்; என்று ஆனது தெரிந்த வள்ளல் - என்ற அந்த உண்மையைத் தெரிந்த வள்ளலாகிய இராமன்; அளப்ப அருங்கோடி அம்பால் - அளவிட முடியாத கோடிக்கணக்கான அம்புகளால்; ஏனையர் தலைகள் எல்லாம் - முன்னமே அழிந்தார்போக மற்றவர்களின் தலைகளையெல்லாம்; இடியுண்ட மலையின் இட்டான் - இடியால் தாக்கப்பட்ட மலை எப்படிச் சரியுமோ அப்படிக் குவித்தான். அரக்கர் ஏவிய தெய்வப் படைகளைத் தடுப்பதற்காகத் தெய்வப் படைகளைப் பயன்படுத்தினான். அரக்கரை அழிக்கப் பயன்படுத்த வில்லை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'When I myself loose those, they are hard to stop; the world itself
  2. would burst and crackle like a flower thrown into the submarine fire', so thinking,
  3. the bountiful one, who knew how it was, with countless crores of arrows
  4. laid low the heads of all the rest like mountains struck by thunder.

What the poem says

Irāmaṉ understands that if he used the divine weapons to attack, nothing could stop them. The whole world would crackle and burst like a flower dropped into the fire at the end of an age.

So he uses those weapons only to block the demons' missiles. He kills the remaining demons with countless ordinary arrows instead, piling up their heads like mountains shattered by lightning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tāṉ avai toṭutta pōtu, taṭuppa aritu; ulakamtāṉē
pūnaṉi vaṭavait tīyiṉ pukkeṉap porintu pōm 'eṉṟu,
āṉatu terinta vaḷḷal aḷappa aruṅ kōṭi ampāl
ēṉaiyar talaikaḷ ellām iṭiyuṇṭa malaiyiṉ iṭṭāṉ.