கம்பராமாயணம் 9589 · யுத்த 31.2

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நூறு கோடி தேர் நொறில்பரி நூறு இரு கோடி
ஆறுபோல் மத மா கரி ஐ இரு கோடி
ஏறுகோள் உறு பதாதியும் இவற்று இவற்று இரட்டி.
சீறு கோள் அரி ஏறு அனானுடன் அன்று சென்ற.

பொருள் · Meaning in Tamil

அன்று சீறுகொள் அரிஏறு அனானுடன் - அப்போது சீறுகின்ற வலிய ஆண் சிங்கம் போன்ற இராவணனுடன்; நூறு கோடி தேர் - நூறு கோடி தேர்களும், இருநூற்றுக் கோடி நொறில் பரி - இருநூறு கோடி விரைந்து செல்லும் குதிரைகளும்; ஐயிரு கோடி - பத்துக்கோடி; ஆறுபோல் மதமாகரி - ஆற்றுநீர் போல் ஒழுகும் மத நீரையுடைய பெரிய யானைகளும்; இவற்று இரட்டி ஏறுகோள் உறு பதாதியும் - இருபத்தாறு கோடி சிங்க ஏற்றைப் போன்ற காலாட்படையும், சென்றன - உடன் போயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A hundred crores of chariots, two hundred crores of swift horses,
  2. ten crores of great elephants whose rut flowed like a river,
  3. and foot soldiers, fierce as lions, twice as many as these,
  4. went with him that day, who was like a raging lion.

What the poem says

A vast army marches out with Irāvaṇaṉ, who is like a snarling lion. There are a hundred crores of chariots, two hundred crores of swift horses, and ten crores of elephants whose musth runs like a river.

The foot soldiers, as fierce as lions, are said to be twice the number of all these together.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nūṟu kōṭi tēr noṟil pari nūṟṟu iru kōṭi
āṟupōl mata mākari ai iru kōṭi
ēṟu kōḷ uṟu patātiyum ivaṟṟu iraṭṭi.
cīṟu kōḷ ari ēṟu aṉāṉuṭaṉ aṉṟu ceṉṟa.