கம்பராமாயணம் 9590 · யுத்த 31.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மூன்று வைப்பினும் - விண்ணுலகு, மண்ணுலகு, பாதலம் எனும் மூன்றுலகத்திலும்; அப்புறத்து உலகினும் - அவற்றிற்கு அப்பாற்பட்ட உலகத்திலும் உள்ளவர்களாய்; முனையின் ஏன்று கோளுறும் வீரர்கள் - போர்முனையில் எதிர்த்துப் போர் புரியும் அரக்கவீரர்கள் யாவரும்; வம்மின் என்று இசைக்கும் - வாருங்கள் என அழைப்பது போன்று ஒலிக்கும், ஆன்ற பேரியும் - பெரிய முரசுகளும்; அதிர் குரல் சங்கமும் - கேட்டாரை அதிரச் செய்யும் குரலை உடைய சங்குகளும்; அசனி ஈன்ற காளமும் - இடி ஒலி உண்டாக்கும் எக்காளமும் ஆகிய இசைக்கருவிகளின் ஒலி; ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப - பதினான்கு உலகங்களிலும் சென்று ஒலிப்பன ஆயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'In the three worlds and in the worlds beyond, you heroes
- who stand and fight at the battle-front, come!', so they seemed to call,
- the great drums, the conches with their shaking voice, and the horns
- that gave birth to thunder sounded through all the seven and seven worlds.
What the poem says
As Irāvaṇaṉ's army advances, its war music fills all fourteen worlds. Great drums, conches with a blare that makes listeners tremble, and horns that sound like thunder ring out.
Together they seem to summon every demon warrior in heaven, on earth, in the underworld and beyond to come and join the fight.