கம்பராமாயணம் 9591 · யுத்த 31.4

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அனையன் ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை அவுணர்
வினையை வானவர் வெவ்வினைப் பயத்தினை, வீரர்
நினையும் நெஞ்சையும் சுடுவதோர் நெருப்பினை, நிமிர்ந்து
கனையும் விண்ணையும் கடப்பதோர் கடலினை, கண்டார்.

பொருள் · Meaning in Tamil

அனைய ஆகிய அரக்கர்க்கும் - அத்தன்மை கொண்டு வரும் அரக்கர்களுக்கும்; அரக்கனை - அரக்கனாக இருப்பவனை; அவுணர் வினைய - அவுணர்களின் தீவினையுடைய; வானவர் வெவ்வினைப் பயத்தினை - தேவர்களின் கொடிய தீவினைப் பயனாகத் துன்பம் செய்கின்றவனை; வீரர் நினையும் நெஞ்சையும் - தன்னை நினைக்கும் போர் வீரர்களின் உள்ளத்தையும்; சுடுவது ஓர் நெருப்பினை - சுடுகின்ற ஒப்பற்ற தீப்போன்றவனை; நிமிர்ந்து கனையும் எண்ணையும் - எல்லையைக் கடந்து நிற்கும் அளவினையும்; கடப்பது ஓர் கடலினைக் கண்டார் - கடந்து நிற்கின்ற ஒப்பற்ற கடல் போன்ற நிறமும் ஆற்றலும் உடைய இராவணனைக் கண்டனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They saw him, the demon of demons even to such demons as these,
  2. the evil fate of the Avuṇas, the fruit of the gods' cruel deeds,
  3. a fire that burns the very hearts of heroes who think of him,
  4. a sea that rises and goes beyond all measure and all thought.

What the poem says

The monkey warriors now catch sight of Irāvaṇaṉ, and the poet describes him through their eyes. He is a demon even among demons. He brings ruin even on the Avuṇas, the titans, and torments the gods like the fruit of their bad karma.

He is a fire that scorches the courage of any hero who so much as thinks of him, and an ocean whose size and power go beyond all reckoning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiya ākiya arakkarkkum arakkaṉai avuṇar
viṉaiyai vāṉavar vev viṉaip payattiṉai, vīrar
niṉaiyum neñcaiyum cuṭuvatu ōr neruppiṉai, nimirntu
kaṉaiyum eṇṇaiyum kaṭappatu ōr kaṭaliṉaik kaṇṭār.