கம்பராமாயணம் 9593 · யுத்த 31.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அரக்கன் சேனையும் - இராவணன் படையும்; ஆருயிர் வழங்குவான் அமைந்த - தம் அரிய உயிரைப் போரில் அழிக்குமாறு நின்ற; குரக்கு வேலையும் - குரங்கின் கடல் போன்ற படையும்; ஒன்றோடு ஒன்று எதிர் எதிர் கோத்து - ஒன்றுடன் ஒன்று எதிர் எதிராகக் கைகலந்து; நெருக்கி நேர்ந்தன - நெருக்கியவாறு போர் புரிந்தன; நெருப்பு இடை பொடித்தன - தாக்குவதால் இரு படைக்கும் இடையில் நெருப்புத் தோன்றின; நெருப்பின் உருக்கு செம்பு என - தீயிலே காய்ச்சி உருக்கிய செம்பு போல; உதிரம் அம்பரத்து ஓடினது - இரத்தம் கடலை நோக்கி ஓடியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demon's army and the monkey sea, resolved
- to give up their precious lives, closed with each other face to face
- and pressed hard together; fire sprang up between them; like copper
- melted in fire, the blood ran off towards the sea.
What the poem says
The demon army and the ocean of monkeys, both ready to give their lives, crash together and fight at close quarters.
The force of their blows strikes sparks of fire between them. The blood that pours out runs towards the sea like copper melted in a furnace.