கம்பராமாயணம் 9596 · யுத்த 31.9

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கண் திறந்தன கணவர்தம் முகத்து அவர் முறுவல்
கண்டு இறந்து அன மடந்தையர், உயிரொடும் கலந்தார்
பண்டு இறந்தன பழம் புணர்வு அகம் புகப் பன்னி,
பண் திறந்தன புலம்பு ஒலி, சிலம்பு ஒலி பணிப்ப.

பொருள் · Meaning in Tamil

பண்டு இறந்தன பழம் புணர்வு அகம்புக - முன்பு தம் கணவருடன் கழித்த பழைய புணர்ச்சி நிகழ்ச்சிகளை நினைத்து; பன்னி பண் திறந்தன புலம்பு ஒலி சிலம்பு ஒலி பனிப்ப - பலவாறு வாய்விட்டுப் பாடினாற் போன்று புலம்புகின்ற ஒலியும் சிலம்பின் ஒலியும் கலந்து நடுங்கியவாறு ஒலிக்க; கணவர் கண் திறந்தன தம் முகத்து - கணவர் தம் கண்கள் விழித்துள்ளனவாகிய முகங்களில்; அவர் முறுவல் கண்டு இறந்த அன மடந்தையர் - அவர்களுடைய சிரிப்பைப் பார்த்து மகிழ்ந்து தம் உடலை விட்டுப் பிரிந்தவர் போன்ற கற்புடை மகளிர்; உயிரொடும் கலந்தார் - தம் இறந்த கணவருடைய உயிரொடு ஒன்றாய்க் கலந்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The faithful wives, like women who died on seeing their husbands' smiles
  2. on faces whose eyes were still open,
  3. recalling within the old unions now gone by and lamenting in many ways,
  4. as their wailing poured out like song and their anklets trembled, joined them in their very life.

What the poem says

On the battlefield the wives of the fallen demons find their husbands' bodies. The dead men's faces still have open eyes and seem to smile.

The women remember the love they once shared and pour out their grief in laments that sound like songs, their anklets shaking. Like women dying of joy at seeing their husbands smile, these faithful wives give up their lives and are united with their husbands' spirits.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇ tiṟantaṉa kaṇavartam mukattu avar muṟuval
kaṇ iṟanta aṉa maṭantaiyar, uyiroṭum kalantār
paṇṭu iṟantaṉa paḻam puṇarvu akam pukap paṉṉi,
paṇ tiṟantaṉa pulampu oli, cilampu oli paṉippa.