கம்பராமாயணம் 9599 · யுத்த 31.12

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அழலும் கண்களிறு அணியொடும் துணிபடும்; ஆவி
சுழலும் பல்படைத் தொகுதியும்; அன்னதே சுடர் தேர்;
கழலும் சோரிநீர் ஆற்றொடும் கடல் இடைக் கலக்கும்;
குழலும் நூலும் போன்ம், அனுமனும் தானும் அக்குமரன்.

பொருள் · Meaning in Tamil

குழலும் நூலும் போல் - நெய்கின்ற குழலும் அதைத் தொடர்ந்து செல்லும் நூலும் போல; அனுமனும் தானும் அக்குமரன் - ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து அநுமனும் இலக்குமணனும் போர் செய்தனர்; அழலும் கண் களிறு - சினம் மிக்க கண்ணுடைய யானைகள்; அணியொடும் துணிபடும் - அணிந்த அணிகலன்களோடு துண்டுபடும்; பல்படைத் தொகுதியும் ஆவி சுழலும் - பலவகைப் படை வீரரின் கூட்டமும் உயிர் சுழன்று நிற்கும்; சுடர்த்தேர் அன்னதே - ஒளிமிக்க தேர்களும் சுழலும்; கழலும் சோரிநீர் ஆற்றொடும் கடலிடைக் கலக்கும் - இறந்து பட்ட உடம்பிலிருந்து இரத்தம் ஆற்று நீரோடு கலந்து கடலிடையே சேரும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Elephants with blazing eyes are cut to pieces with their trappings;
  2. the lives of the many massed troops whirl away; so too the shining chariots;
  3. the gushing blood mixes in the sea along with the river's water;
  4. like the shuttle and the thread, Aṉumaṉ and that prince fight together.

What the poem says

Irāvaṇaṉ continues to survey the destruction. Elephants are cut down with their ornaments, the lives of whole companies spin away, chariots are wrecked, and the blood flows into the sea with the river water.

Aṉumaṉ and the prince Ilakkuvaṉ fight together, close behind each other, like the shuttle in a loom and the thread that follows it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḻalum kaṇ kaḷiṟu aṇiyoṭum tuṇi paṭum; āvi
cuḻalum pal paṭait tokutiyum; aṉṉatē cuṭart tēr;
kaḻalum cōri nīr āṟṟoṭum kaṭaliṭaik kalakkum;
kuḻalum nūlumpōl, aṉumaṉum tāṉum ak kumaraṉ.