கம்பராமாயணம் 9600 · யுத்த 31.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வில்லும் கூற்றுவற்கு உண்டு என திரிகின்ற வீரன் - இயமனுக்குத் தண்டேயன்றி வில்லும் படையாக உண்டு எனக் கூறும்படி போர்க்களத்தில் திரிகின்ற இலக்குவன்; கொல்லும் கூற்று எனக் குறைக்கும் - கொல்லுவதைத் தொழிலாக கொண்ட யமன் போல் அரக்கர் எண்ணிக்கையைக் கொன்று குறைக்கின்றான்; இந்நிறை பெருங்குழுவை - இந்நிலையில் வானரர் பெருங் கூட்டத்தை; ஒல்லும் கோள் அரி - வெல்லுதற்குரிய வலிமையுடைய சிங்கமும்; உரும் அன்ன - இடியும் போன்ற; குரங்கினது உகிரும் பல்லும் கூர்க்கின்ற - அனுமனாம் குரங்கின் நகமும் பல்லும் அரக்கர் படையை அழிக்கக் கூர்மையுடையன; அரக்கர் தம் படைகள் கூர்க்கில - அரக்கரின் படைகள் வானரங்களை அழிக்கக் கூர்மை பெறவில்லை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The hero who roams so that men say 'Death too has a bow',
- cuts down this full, great throng like killing Death;
- the claws and teeth of that thunder-like monkey, a lion fit to conquer,
- are sharp; but the weapons of the demons are not sharp.
What the poem says
Ilakkuvaṉ roams the field killing demons so freely that it seems Yama, the god of death, has taken up a bow as well as his usual staff. He thins the demon ranks as Death himself would.
Aṉumaṉ, as strong as a lion and as terrible as thunder, tears through the demons with claws and teeth. The demons' own weapons, by contrast, seem to have lost their edge against the monkeys.