கம்பராமாயணம் 9605 · யுத்த 31.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏற்றுக் கோடலும் - (அவ்வாறு இலக்குவன் எதிர் நின்று) எதிர்த்த அளவில்; இராவணன் எரிமுகப் பகழி - இராவணன் நெருப்பை முனையிலே கொண்ட அம்புகளை; நூற்றுக் கோடியின் மேல் - நூறு கோடிக்கு மேலாக; செலச் சிலை கொடு நூக்க - செல்லுமாறு வில்லால் எய்ய; காற்றுக்கு ஓடிய பஞ்சு என - காற்றுக்கு எதிர் நிற்கமுடியாமல் ஓடிப் பறந்த பஞ்சுபோல்; திசைதொறும் கரக்க - திசைகள் தோறும் சென்று மறையுமாறு; இலக்குவன் வேற்றுக்கோல் கொடு விசையால் விலக்கினன் - இலக்குவன் அவற்றிற்கு எதிரான அம்புகள் கொண்டு விசையால் எதிர் விலக்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he took up the fight, Irāvaṇaṉ, with his bow, sent forth
- fire-tipped arrows, more than a hundred crores, to fly at him;
- with other arrows Ilakkuvaṉ swiftly drove them off,
- so that they vanished in every direction like cotton blown before the wind.
What the poem says
As soon as Ilakkuvaṉ faces him, Irāvaṇaṉ looses more than a hundred crores of arrows tipped with fire.
Ilakkuvaṉ meets them at speed with arrows of his own. He scatters Irāvaṇaṉ's shafts to every quarter like cotton fluff blown away by the wind.