கம்பராமாயணம் 9614 · யுத்த 31.27

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1எறிந்த காலையில், வீடணன் அதன் நிலை எல்லாம்
அறிந்த சிந்தையன், 'ஐய! ஈது என் உயிர் அழிக்கும் :
பிறிந்து செய்யல் ஆம் பொருளிலை ' என்றதும், பெரியோன்;
'அறிந்து போக்குவல்; அஞ்சல்நீ! ' என்று இடை அணைந்தான்.

பொருள் · Meaning in Tamil

எறிந்த காலையில் - இராவணன் வேலினை எறிந்த போது; அதன் நிலை எல்லாம் அறிந்த சிந்தையன் வீடணன் - அவ்வேலின் திறம் முழுதும் அறிந்த அறிவுடையோனாகிய வீடணன்; ஐய! ஈது என் உயிர் அழிக்கும் - ஐயனே! இவ்வேல் என் உயிரை வாங்கும்; பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை என்றலும் - தடுத்துச் செய்தற்குரிய உபாயம் வேறு இல்லை என்று கூறியதும்; பெரியோன் அறிந்து போக்குவல் - இதைப் போக்கும் திறம் அறிந்து போக்குகின்றேன்; நீ அஞ்சல் - நீ பயப்படாதே; என்று இடை அணைத்தான் - எனக் கூறி வீடணன் நின்ற இடத்தில் வந்து நின்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When it was thrown, Vīṭaṇaṉ, whose mind knew
  2. all its nature, said, 'Sir! This will destroy my life;
  3. there is nothing else that can be done to stop it'; at that the great one
  4. said 'I know how to turn it aside; do not fear!' and drew close to him.

What the poem says

Vīṭaṇaṉ knows all about this spear. As it flies towards him he tells Ilakkuvaṉ that it will surely kill him and that nothing can be done to stop it.

Ilakkuvaṉ, the great one, reassures him. He tells Vīṭaṇaṉ not to be afraid, says he knows how to deal with it, and moves close to stand beside him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṟinta kālaiyil, vīṭaṇaṉ ataṉ nilai ellām
aṟinta cintaiyaṉ, 'aiya! ītu eṉ uyir aḻikkum:
piṟintu ceyyal ām poruḷ ilai ' eṉṟalum, periyōṉ;
'aṟintu pōkkuval; añcal nī! ' eṉṟu iṭai aṇaittāṉ.