கம்பராமாயணம் 9615 · யுத்த 31.28

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எய்த வாளியும் ஏவின படைக்கலம் யாவும்,
செய்த மாதவத்து ஒருவனைச் சிறுதொழில் தீயோன்
வய்த வையினில் ஒழிந்தன; 'வீடணன் மாண்டான்;
உய்தல் இல்லை 'என்று உம்பரும் தம் மனம் உலைந்தார்.

பொருள் · Meaning in Tamil

எய்த வாளியும் - இலக்குவன் எய்த அம்புகளும்; ஏவின படைக்கலம் யாவும் - ஏவிய படைக்கருவிகள் எல்லாம்; செய்த மாதவத்து ஒருவனை - சிறந்த தவத்தால் பெரியோனை; சிறு தொழில் தீயோன் வைத வைவினில் ஒழிந்தன - கீழான ஏவல் புரியும் தீயோன் சபித்த சாபம் பலிக்காது போயின போலப் பயனின்றிப் போயின; வீடணன் மாண்டான் - வீடணன் செத்தான்; உய்தல் இல்லை என்று - பிழைப்பது இனி இல்லை என்று; உம்பரும் பெருமனம் உலைந்தார் - தேவர்களும் தம்முடைய பெருமை மிக்க மனம் அழிந்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The arrows he shot, and every weapon he sent,
  2. like the curse of a petty, wicked man reviling one
  3. of great penance, came to nothing; 'Vīṭaṇaṉ is dead;
  4. there is no escape', and even the gods were shaken to their great hearts.

What the poem says

Ilakkuvaṉ fires arrow after arrow and weapon after weapon at the spear, but none of them has any effect.

They are as useless as the curse of a wicked, small-minded man hurled at a great ascetic, which cannot harm him. The gods watching are sure that Vīṭaṇaṉ is as good as dead, and their hearts sink.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eyta vāḷiyum ēviṉa paṭaikkalam yāvum,
ceyta mā tavattu oruvaṉaic ciṟu toḻil tīyōṉ
vaita vaiviṉil oḻintaṉa; 'vīṭaṇaṉ māṇṭāṉ;
uytal illai 'eṉṟu umparum peru maṉam ulaintār.