கம்பராமாயணம் 9619 · யுத்த 31.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எங்கு நீங்குதி நீ என வீடணன் எழுந்தான் - (போர்க்களத்தை விட்டுப் புறப்படும் இராவணனைப் பார்த்து) வீடணன், 'நீ எங்கே செல்கிறாய்' என்று எழுந்து; சிங்கஏறு அன்ன சீற்றத்தான் - ஆண் சிங்கம் போன்ற கோபம் உடையவனாய், இராவணன் தேரில் - இராவணனுடைய தேரிலே; பொங்குபாய் பரி சாரதியொடும் பட - கிளர்ந்து பாயும் குதிரையொடு தேரோட்டியும் இறந்திட; சங்க வானவர் தலை எடுத்திட நெடுந்தண்டால் புடைத்தான் - திரளாயுள்ள தேவர்கள் மீண்டும் கிளர்ச்சி பெற்றுயரத் தன் நீண்ட தண்டாயுதத்தால் அடித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Where are you going?' Vīṭaṇaṉ cried, and rose up,
- with the wrath of a lion, and on Irāvaṇaṉ's chariot
- he struck with his long mace, so that the leaping, surging horses fell with the charioteer,
- and the assembled gods lifted up their heads.
What the poem says
Seeing Irāvaṇaṉ about to leave the field after his spear has felled Ilakkuvaṉ, Vīṭaṇaṉ leaps up in a lion's fury and shouts at him, asking where he thinks he is going.
He smashes Irāvaṇaṉ's chariot with his long mace and kills the spirited horses and the charioteer. The gods, who had hung their heads in grief, lift them again in hope.