கம்பராமாயணம் 9621 · யுத்த 31.34

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தேடிச் சேர்ந்த என் பொருட்டினால், உலகுடைச் செல்வன்
வாடிப் போயினன்; நீ இனி வஞ்சனை மதியால்
ஓடிப் போகுவது எங்கு? அடா! உன்னொடும் உடனே
வீடிப் போவென் 'என்று அரக்கன்மேல் வெகுண்டான்.

பொருள் · Meaning in Tamil

தேடிச் சேர்ந்த என் பொருட்டினால் - அடைக்கலமாகப் புகுந்த என்னைக் காப்பதற்காக; உலகுடைச் செல்வன் வாடிப் போயினன் - உலகம் எல்லாம் தன்னதாக உடைய இலக்குவன் வாடிப் போனான்; இனி வஞ்சனை மதியால் ஓடிப் போகுவது எங்கு? - இனிமேல் உன்னுடைய வஞ்சனை புத்தியால் நீ ஓடிப் போவது எங்கு? அடா! உன்னொடும் உடனே வீடிப் போவென் என்று - அடா உன்னோடு இப்போதே போர் செய்து உன்னைக் கொன்று நானும் இறப்பேன் என்று; அரக்கன் மேல் வீடணன் வெகுண்டான் - இராவணன் மீது வீடணன் கோபித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Because of me, who sought him out and came to him, the lord who owns the world
  2. has withered away; you, with your treacherous mind, where now
  3. will you run off to? Fellow! Together with you, at once,
  4. I will perish', so Vīṭaṇaṉ raged against the demon.

What the poem says

Vīṭaṇaṉ turns on his brother in fury. Ilakkuvaṉ, a prince who could claim the whole world, has fallen because he protected Vīṭaṇaṉ, who came to them for refuge.

Where does Irāvaṇaṉ think he can run with his treacherous mind? Vīṭaṇaṉ vows to fight him right now, kill him and die along with him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tēṭic cērnta eṉ poruṭṭiṉāl, ulakuṭaic celvaṉ
vāṭip pōyiṉaṉ; nī iṉi vañcaṉai matiyāl
ōṭip pōkuvatu eṅku? aṭā! uṉṉoṭum uṭaṉē
vīṭip pōveṉ 'eṉṟu arakkaṉmēl vīṭaṇaṉ vekuṇṭāṉ.