கம்பராமாயணம் 9626 · யுத்த 31.39

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி,
'இருத்தியோ, கடிது ஏகலை? இளவலை இங்ஙன்
வருத்தம் காணுமோ மன்னவன்? ' என்றனன் சாம்பன்;
கருத்தை உன்னி, அம்மாருதி உலகு எலாம் கடந்தான்.

பொருள் · Meaning in Tamil

மருத்தின் காதலன் - வாயுமகனாகிய அனுமனின்; மார்பிடை அம்பு எலாம் வாங்கி - மார்பில் தைத்த அம்பு எலாம் வாங்கிவிட்டு; இருத்தியோ கடிது ஏகலை - நீ மருந்து கொண்டு வராமல் இருப்பாயோ விரைந்து செல்ல மாட்டாயா; மன்னவன் இளவலை இங்ஙன் வருத்தம் காணுமோ - இராமன் தன் தம்பியாம் இலக்குவனை இவ்வருத்த நிலையில் காண்பானா? என்னலும் - என்று சாம்பவன் கூற; அன்னான் கருத்தை உன்னி - அத்தகையோன் எண்ணத்தை நினைத்துப் பார்த்து; அம்மாருதி உலகு எலாம் கடந்தான் - அவ்வனுமான் உலகங்களை எல்லாம் கடந்து சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Drawing out all the arrows from the chest of the wind's beloved son,
  2. he said, 'Will you sit here? Will you not go swiftly? Shall the king
  3. see his younger brother suffering like this?'; and that Māruti,
  4. taking his meaning to heart, passed beyond all the worlds.

What the poem says

Cāmpavaṉ pulls out the arrows Irāvaṇaṉ fired into Aṉumaṉ, the beloved son of the wind god. He urges him not to sit there but to go at once, asking whether Irāmaṉ should be made to see his younger brother in such a state.

Understanding exactly what Cāmpavaṉ wants, Aṉumaṉ sets off and speeds past all the worlds to fetch the medicine.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maruttiṉ kātalaṉ mārpiṭai ampu elām vāṅki,
'iruttiyō, kaṭitu ēkalai? iḷavalai iṅṅaṉ
varuttam kāṇumō maṉṉavaṉ? ' eṉṉalum, aṉṉāṉ
karuttai uṉṉi, am māruti ulaku elām kaṭantāṉ.