கம்பராமாயணம் 9627 · யுத்த 31.40

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உத்தர திசைமேல் ஓடி உலகு எலாம் கடக்கப் பாய்ந்து,
மெய்த்தகு மருந்து தன்னை, வெற்பொடும் கொணர்ந்தான், வீரன்;
பொய்த்தல் இல் குறிகெடாமே பொது அற நோக்கி, பொன்போல்
வைத்தது வாங்கிக் கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ?

பொருள் · Meaning in Tamil

உய்த்து ஒரு திசை மேல் ஓடி - (தன் கருத்தை மருந்தின் மீது) செலுத்தி வட திசையில் ஓடி; உலகு எலாம் கடக்கப் பாய்ந்து - உலகங்கள் எல்லாம் கடந்திடுமாறு பாய்ந்து சென்று; மெய்த்தகு மருந்து தன்னை - மெய்ம்மையுடன் பொருந்திய மருந்தை; வெற்பொடும் கொணர்ந்த வீரன் - மருந்து மலையுடன் முன்னர் கொண்டு வந்த வீரனாம் அனுமான்; பொய்த்தல் இல்குறி கெடாமே பொது அற நோக்கி - பொய்யில்லாத அடையாளங்களை நன்கு பார்த்து; பொன் போல் வைத்தது வாங்கிக் கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ? - பாதுகாப்பாக வைத்த பெருஞ்செல்வம் போல் போற்றி வைத்ததை மீண்டும் கொண்டு வருவதில் துன்பம் உண்டோ? (இல்லை)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Running towards the northern quarter, leaping so as to cross all the worlds,
  2. the hero who had brought the true medicine before, together with its mountain,
  3. looking closely, without fail, at the signs that never lie,
  4. could there be any trouble for him in fetching what had been laid away like gold?

What the poem says

Aṉumaṉ speeds north across all the worlds. He has made this journey once before, earlier in the war, when he carried the whole medicine mountain back to revive the army.

He knows the reliable landmarks and can find the herb without fail. For him, bringing it back is no harder than fetching gold one has carefully put away.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uttara ticaimēl ōṭi ulaku elām kaṭakkap pāyntu,
meyt taku maruntutaṉṉai, veṟpoṭum koṇarnta vīraṉ;
poyttal il kuṟi keṭāmē potu aṟa nōkki, poṉpōl
vaittatu vāṅkik koṇṭu varutalil varuttam uṇṭō?