கம்பராமாயணம் 9628 · யுத்த 31.41

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தந்த நன் மருந்து தன்னை; தாக்குதல் முன்னம் வேகம்
வந்தது, மாண்டார்க்கு எல்லாம் உயிர்தரும் வலத்தது என்றால்.
நொந்தவர் நோவு தீர்க்கச் சிறிது அன்றோ? நொடியின் முன்னே,
இந்திரன் உலகம் ஆர்க்க, எழுந்தனன் இளைய வீரன்.

பொருள் · Meaning in Tamil

தந்தனன் மருந்து தன்னை - அனுமன் தந்த நல்ல மருந்தை; தாக்குதல் முன்னே யோகம் வந்தது - மருந்தின் வாசனை வருமுன்னே நல்வினை கூடிற்று; மாண்டார்க்கு எல்லாம் உயிர் தரும் வலத்தது என்றால் - செத்தவர் எல்லார்க்கும் உயிர் அளிக்கும் வலிமையுடையது என்றால்; நொந்தவர் நோவு தீர்க்கச் சிறிது அன்றோ - வேலால் துன்புற்றவரின் துன்பம் தீர்ப்பது சிறிய சொல் அல்லவா? இந்திரன் உலகம் ஆர்க்க - தேவர் உலகம் ஆரவாரம் செய்ய; நொடிதல் முன்னே இளைய வீரன் எழுந்தனன் - நொடிப் பொழுதில் இலக்குவன் உயிர் பெற்று எழுந்தான்.

சில சுவடிகளில் இச்செய்யுளோடு இப்படலம் முடிவுறும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He brought the medicine; even before its scent could strike, good fortune
  2. had come; if it has the power to give life to all who have died,
  3. is it not a small thing for it to end the pain of one who was hurt? Before a moment had passed,
  4. as Intiraṉ's world cheered, the younger hero rose up.

What the poem says

Aṉumaṉ returns with the healing herb, and good fortune is already at work even before its fragrance reaches Ilakkuvaṉ.

This medicine can bring the dead back to life, so curing a wounded man is a small matter for it. In an instant Ilakkuvaṉ rises again, and the heaven of Indra rings with cheers. The commentary notes that in some manuscripts the section ends with this verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tantaṉaṉ maruntutaṉṉai; tākkutal muṉṉē yōkam
vantatu, māṇṭārkku ellām uyir tarum valattatu eṉṟāl.
nontavar nōvu tīrkkac ciṟitu aṉṟō? noṭital muṉṉē,
intiraṉ ulakam ārkka, eḻuntaṉaṉ iḷaiya vīraṉ.