கம்பராமாயணம் 9629 · யுத்த 31.42

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எழுந்து நின்று அனுமன் தன்னை இருகையால் தழுவி, எந்தாய்!
விழுந்திலன் அன்றோ மற்று அவ் வீடணன்! 'என்ன, விம்மித்
தொழுந் துணையவனை நோக்கி, துணுக்கமும், துயரும் நீங்கி,
'கொழுந்தியும் மீண்டாள்; பட்டான் அரக்கன் 'என்று உவகை கொண்டான்.

பொருள் · Meaning in Tamil

எழுந்து நின்று - இலக்குவன் எழுந்து நின்று; அனுமன் தன்னை இரு கையால் தழுவி - அனுமனைத் தன் இரு கைகளாலும் தழுவிக்கொண்டு; எந்தாய் விழுந்திலன் அன்றோ மற்று அவ்வீடணன் என்ன - எம் தந்தை போன்றவனே! அந்த வீடணன் இறந்து பட வில்லை அல்லவா என்று கேட்க; விம்மித் தொழும் துணையவனை நோக்கி - (அது கேட்டுத்) தேம்பித் தன்னை வணங்கும் துணைவனைப் பார்த்து; துணுக்கமும் துயரும் நீக்கி - மன நடுக்கமும் துன்பமும் தீர்ந்து; அரக்கன் பட்டான் - இராவணன் இனி மாண்டான்; கொழுந்தியும் மீண்டாள் - சீதையும் சிறை மீண்டாள்; என்று உவகை கொண்டான் - என மகிழ்ச்சி கொண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Rising and standing, he embraced Aṉumaṉ with both arms: 'My father!
  2. Has not that Vīṭaṇaṉ fallen, then?' he asked; and seeing his companion
  3. sobbing and bowing to him, freed from trembling and grief,
  4. 'Our sister-in-law is won back; the demon is as good as dead', he rejoiced.

What the poem says

Revived, Ilakkuvaṉ hugs Aṉumaṉ with both arms and calls him 'my father'. His first thought is for the man he saved, and he asks whether Vīṭaṇaṉ is safe.

When he sees Vīṭaṇaṉ sobbing with relief and bowing before him, his fear and sorrow fall away. He rejoices, sure now that Irāvaṇaṉ is doomed and that Cītai, his brother's wife, will be set free.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻuntu niṉṟu aṉumaṉtaṉṉai iru kaiyāl taḻuvi, entāy!
viḻuntilaṉ aṉṟō maṟṟu av vīṭaṇaṉ! 'eṉṉa, vimmit
toḻum tuṇaiyavaṉai nōkki, tuṇukkamum, tuyarum nīkki,
'koḻuntiyum mīṇṭāḷ; paṭṭāṉ arakkaṉ 'eṉṟu uvakai koṇṭāṉ.