கம்பராமாயணம் 9631 · யுத்த 31.44

Section யுத்த காண்டம் / 31. வேல் ஏற்றப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒன்று அல பல என்று ஓங்கும் உயர்பிணத்து உம்பர் ஒன்றும்
குன்றுகள் பலவும் சோரிக் குரைகடல் அனைத்தும், தாவிச்
சென்று அடைந்து, இராமன் தன்னைத் திருவடி வணக்கம் செய்தார்;
வென்றியின் தலைவர்க் கண்ட இராமன் 'என் விளைந்தது? 'என்றான்.

பொருள் · Meaning in Tamil

ஒன்று அல பல என்று - ஒன்று அல்லாதன பல என்று கூறுமாறு; உயர்பிணத்து குன்றுகள் பலவும் - உயர்ந்த பிணக் குன்றுகள் பலவற்றையும்; சோரிக் குரைகடல் அனைத்தும் - ஒலிக்கும் இரத்தக் கடல் அனைத்தும்; உம்பரோடும் தாவிச் சென்று, அடைந்து - தேவர்களோடும் கடந்து சென்று சேர்ந்து; இராமன் தன்னை திருவடி வணக்கம் செய்தார் - இராமனின் திருவடிகளை வணங்கினார்கள்; வென்றியின் தலைவர் - வெற்றி கண்ட தலைவர்கள்; கண்ட இராமன் - அவ்வாறு வணங்கக் கண்ட இராமன்; விளைந்தது என் என்றான் - நடந்தது என்ன என்று கேட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Not one but many, the lofty hills of corpses,
  2. together with the gods, and all the roaring seas of blood, leaping across them
  3. they went and arrived, and bowed at Irāmaṉ's holy feet;
  4. seeing the victorious leaders, Irāmaṉ asked, 'What has happened?'

What the poem says

Together with the gods, the victorious heroes cross the battlefield, leaping over countless mountains of corpses and roaring seas of blood, and reach Irāmaṉ.

They bow at his feet, and Irāmaṉ, who has been fighting elsewhere, asks them what has happened.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oṉṟu ala pala eṉṟu ōṅkum uyar piṇattu umparōṭum
kuṉṟukaḷ palavum cōrik kurai kaṭal aṉaittum, tāvic
ceṉṟu aṭaintu, irāmaṉ taṉṉait tiruvaṭi vaṇakkam ceytār;
veṉṟiyiṉ talaivar kaṇṭa irāmaṉ 'eṉ viḷaintatu? 'eṉṟāṉ.