கம்பராமாயணம் 9633 · யுத்த 31.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புயல் பொழி அருவிக் கண்ணன் - மேகம் போல் பொழியும் கண்ணீர் அருவியை உடைய கண்களுடையவனும்; பொருமலன் பொங்குகின்றான் - அழுது விம்முபவனும் மகிழ்ச்சி பொங்கும் மனமுடையவனும்; உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவத்தம்பி - உயிர் பிரிந்து வெளியே நிற்க அதைப் பிரிந்த உடம்பு போல வாடிய உருவமுடையவனும் ஆகிய தம்பி இலக்குவன்; துயர் தமக்கு உதவி - தமக்குப் பிரிவாற்றாத் துன்பம் கொடுத்து விட்டு; மீளாத் துறக்கம் பெற்று உயர்ந்த தொல்லைத் தயரதற் கண்டால் ஒத்த - இறந்து மீண்டும் வராத துறக்க உலகைப் பெற்றுயர்வுற்ற பழைய தயரதனை வரக்கண்டு மகிழ்ந்தது போன்று; தம்முனைத் தொழுது சார்ந்தான் - தன் அண்ணன் இராமனை வணங்கி வந்தடைந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With eyes pouring tears like rain from clouds, sobbing and overflowing,
- the younger brother, whose form was like a body standing when its life had gone out of it,
- approached his elder brother and bowed, and it was as though, after giving him sorrow,
- the ancient Tacarataṉ, who had gained the heaven from which none returns, had come back.
What the poem says
Ilakkuvaṉ comes to Irāmaṉ and bows before him, weeping like a rain cloud and sobbing with feeling. He still looks pale and drawn, like a body whose life has only just returned to it.
For Irāmaṉ, seeing him is like seeing his dead father Tacarataṉ come back from heaven, from which no one returns, after causing him so much grief.